
http://www.tamildict.com
கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
படம் 1
http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.
படம் 2
உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.
படம் 3
அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.
படம் 4
அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.
படம் 5
இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.
படம் 6
நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2009/12/31/googletamildict/)
1.இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரம் எது ?
2.இந்தியாவின் முதல் பொது மருத்துவமனை எது ?
3.நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி எது ?
4.பாராளுமன்றத்தையே சந்திக்காத இந்தியப்பிரதமர் யார் ?
5.ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள
இடம் எது ?
6.இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
7.மவுண்ட் குக்சிகரம் எந்த நாட்டில் உள்ளது ?
8.வெட்டுக்கிளியின் ரத்தம் நிறம் என்ன ?
9.போ(po) என்ற நதி எந்த நாட்டில் ஓடுகிறது ?
10.மகாபாரதத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் என்ன ?
பதில்கள்:
1.நந்தாதேவி, 2.சென்னை பொது மருத்துவமனை,3.குற்றாலம்,
4. சரண்சிங், 5.கொடைக்கானல், 6.புலி, 7.நியூசிலாந்து,
8.வெள்ளை, 9.இத்தாலி, 10.ஜெயா.
1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது ?
2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும் இந்திய
நதி எது ?
3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது?
4.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது ?
6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது ?
7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ?
8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது?
9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு ?
10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள்
பெயர் என்ன ?
பதில்கள்:
1.சுண்ணாம்புக்கல்,2.கங்கை, 3.விலாங்குமீன்,4.கிரிப்டோகிராபி,
5.குதுப்மினார்,6.நெல்,கோதுமை, 7.குயில், நெதர்லாந்து,
8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா
1.தக்காளிப்பழத்தின் தாயகம் எது ?
2.தரைப்படை வீரர்கள் கல்லூரி முதலில் அமைந்த இடம் எது?
3.மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ?
4.முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றியது எந்த நாட்டில்?
5.போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
6.குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில்
உள்ள நாடு எது ?
7.’தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கியவர் யார் ?
8.கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
9.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
10.நவீன பாரளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து
மன்னர் யார் ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.புனே, 3.அரிஸ்டாட்டில்,4.இஸ்ரேல்,
5.ஜோனாஸ் சாக்,ஆல்பர்ட் சாபின்,6.சீனா,7.சி.பா.ஆதித்தனார்,
8.உ.பி, 9.ஜோசப் பெஸ்கி, 10.முதலாம் எட்வட்ர்ட்.
1.நீர்க்கோள் என்று எதை அழைக்கின்றனர் ?
2.இந்தியாவின் முதன் பெண் சுங்க இலாகா கலெக்டர் யார் ?
3.லட்சத்தீவில் பேசப்படும் முக்கிய மொழி எது ?
4.ஹோமோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார் ?
5.குங்ஃபு என்பதன் உண்மையான பொருள் என்ன ?
6.சீனாவின் ஒரு பகுதியாகா ஹாங்காங் எப்போது சேர்ந்தது ?
7.ஒரு சவரன் தங்கத்தில் எத்தனை கிராம் உள்ளது ?
8.பூப்பந்தாட்டம் எந்த நாட்டில் துவக்கப்பட்டது ?
9.தூத்துக்குடியின் பண்டைய காலப்பெயர் என்ன ?
10.பீம் எனப்படும் முதல் பீரங்கி இந்தியாவில் எங்கு
தயாரிக்கப்பட்டது ?
பதில்கள்:
1.பூமி, 2.கெளசல்யா நாராயணன், 3.மலையாளம்,
4.ஹானிமன்,5.ஒய்வு நேரம், 6. 1997, 7.8 கிராம்ட்,
8.இந்தியா, 9.முத்துநகர். 10.ஆவடி.
நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/25/experience/)
புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
பழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.oldversion.com
இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet , File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/11/03/oldversionsoftwares/)
ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய
ஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்
பயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது
சரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில
வார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக
புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்
போதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று
உதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்
நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wordspy.com
இந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில
வார்த்தைகளை கற்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய
விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற
கட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை
கொடுத்து தேடலாம். Alphaphetic வரிசையிலும் நாம் புதிய
வார்த்தையை தேடலாம். புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில
வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல்
தகவலும் இருக்கும். குழந்தைகளுக்கும் ஆங்கில அறிவை வளர்க்க
விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/31/learnnewwords/)
எக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,
சாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்
கேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
படம் 1
எக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்
அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்
எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல
நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்
போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க
எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.
படம் 2
இணையதள முகவரி : http://www.excel-formulas.com
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி நமக்கு எழும்
கேள்விகளை கட்டத்திற்குள் தட்டச்சு செய்து Get Unstack Now என்ற
பொத்தானை அழுதவேண்டும் அடுத்து வரும் திரையில் Expert Type
பதில் அளிப்பவர்களில் ஒருவரை எந்தத் துறை சார்ந்தவர் என்பதை
தேர்ந்தெடுக்க வேண்டும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).
படம் 3
தேர்ந்தெடுத்ததை சொடுக்கியதும் Step 3 வந்துவிடும் இதில் நாம்
நம்முடைய இமெயில் முகவரியை கொடுத்து Submit Question
என்ற பொத்தானை சொடுக்கவும் சில நிமிடங்களில் நம் இமெயிலுக்கு
பதில் வந்துவிடும். (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது) .
Accounting / Finance , Human Resource / Payroll, Inventory ,
Business / Sales , Loans / Wortgages , General Expert
போன்ற அத்தனை துறையில் இருப்பவர்களுக்கும் எக்சலில்
இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் இங்கு இலவசமாக
கேட்கலாம் கண்டிப்பாக எக்சல் பற்றிய மேலும் அறிந்து கொள்ள
விரும்பும் நபர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வின்மணி (http://winmani.wordpress.com/2010/10/30/excelformula/)
1.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ?
2.வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது ?
3.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
4.கங்கை நதி கடலில் வந்து சேரும் இடத்தின் பெயர் என்ன ?
5.ஸ்புட்னிக் என்பது என்ன ?
6.புகழ் பெற்ற லிங்கராஜா ஆலயம் எங்குள்ளது ?
7.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.காந்தியடிகள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
9.” கலிங்க நாட்டின் “ இன்றைய பெயர் என்ன ?
10.கானுவா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார் ?
பதில்கள்:
1.வைரம், 2.ப்ரோடிட்,3.சுப்ரீம் சோவியத்,4.நவகாளி,
5.செயற்க்கைக்கோள்,6.புவனேஸ்வர்,7.ஸ்பெர்ரி,
8.இரண்டாவது வட்ட மேஜை மாநாடு, 9.ஓரிஸ்ஸா.
10.ராணா சங்கர்.
1.இங்கிலீஸ் கால்வாயை முதன் முதலில் கடந்த ஆண் யார் ?
2.அமெரிக்க முதல் செயற்கைகோளை எப்போது விண்ணில்
ஏவியது ?
3.வினிகரின் வேதியல் பெயர் என்ன ?
4.இந்தியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுவது எது ?
5.வாட்டிகன் நகரத்தின் சிறப்பு பெயர் என்ன ?
6.கண்ணை குருடாக்க கூடிய பாக்டீரியா எது ?
7.உலகிலேய மிகப்பெரிய நூல் நிலையம் எங்குள்ளது ?
8.மிகவும் பழமையான மதம் எது ?
9.மிளகு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
10.பறவைகளில் வேகமாக பறக்ககூடியது எது ?
பதில்கள்:
1.கேப்டன் வெப்,2.1958 ,3.அசிடிக் அமிலம்,4.பெங்களூர்,
5.புனிதப் பார்வை, 6.சுடோமோனஸ்,7.மாஸ்கோ,
8.இந்து மதம், 9.ஆந்திரா. 10.கழுகு.
1.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
2.பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார் ?
3.பெர்முடா முக்கோணம் எந்தக்கடலின் ஒரு பகுதியில் உள்ளது ?
4.கற்பகவிநாயகர் கோவில் கொண்டிருக்கும் ஊர் எது ?
5.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
6.பிரெஞ்சு நாட்டு காந்தி எனப்படுபவர் யார் ?
7.சிறந்த செய்தி மற்றும் சாக்குமெண்டரி படங்களுக்காக
அமெரிக்கா வழங்கும் விருது எது ?
8.எர்த் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
9.பவானி சாகர் அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது ?
10.மேகங்களைப் பற்றிய ஆய்வுத்துறை எது ?
பதில்கள்:
1.குடுமியான் மலை, 2.சார்லஸ் டார்வின்,3.அட்லாண்டிக்,
4.பிள்ளையார்பட்டி,5.ஹால்,6.சார்லஸ் டிகாலோ,
7.எம்மி விருது, 8.எமிலி ஜோலா,9.ஈரோடு.10.நேபாலஜி
1.ரக்பி ஆட்டத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது என்ன ?
3.இசைக்கலைஞர் தான்சேனை ஆதரித்தவர் யார் ?
4.குடைவரைக் கோவில்களை முதலில் கட்டிய மன்னன் யார் ?
5.ஆளுநரின் பதிவிக்காலம் எவ்வளவு ?
6.கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசி ?
7.டெல்லி சலோ என்று முழங்கியவர் யார் ?
8.ராமானுஜரின் கோட்பாடு என்ன ?
9.சாக்லேட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.வியட்நாமின் தலைநகரம் எது ?
பதில்கள்:
1.வில்லியம் வெப்எல்லிங், 2.65,3.அக்பர்,
4.மகேந்திரவர்மன்,5.5 ஆண்டுகள், 6.எகிப்து, 7.நேதாஜி,
8.துவைதம்,9.கொக்கோ விதைகளில் இருந்து.10.ஹனோய்
1.தமிழ்நாட்டின் முதல் சபாநாயகர் ?
2.புறா வாழாதப் பகுதி எது ?
3.ஹார்மோன் இல்லாத உயிரினம் எது ?
4.அக்பர் சமாதி எங்கே உள்ளது ?
5.1944-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி
பெற்ற நாடு எது ?
6.சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ?
7.விதையின்றி இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது ?
8.முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் யார் ?
9.மியான்மர் என்று அழைக்கப்படும் நாடு எது ?
10.உலகிலேயே அதிகமாக தேன் உற்பத்தி செய்யும் நாடு எது?
பதில்கள்:
1.கோபால மேனன், 2.அண்டார்டிகா,3.பாக்டீரியா,
4.சிகந்திராபாத்,5.பிரேசில், 6.96, 7.மைசீலியம்,
8.ஜார்ஜ் வோல்ட்டா, 9.பர்மா. 10.அமெரிக்கா
1.நாதஸ்வரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
2.நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் யார் ?
3.பெரிலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.நீரில் கரையும் உயிர்சத்து எது ?
5.நாகேஷ் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் எது ?
6.கந்தக அமிலம் தயாரிக்கும் முறையின் பெயர் என்ன ?
7.ரூப் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
எது ?
8.உருது ஆட்சி மொழியாக உள்ள இந்திய மாநிலம் எது ?
9.ஜப்பான் நாடு எந்த கண்டத்தில் உள்ளது ?
10.தங்கத்தை விட பலமடங்கு விலை உயர்ந்த உலோகம் எது?
பதில்கள்:
1.ஆச்சா எனும் மரம், 2.ஜேம்ஸ் வார்ட்,3.எல்.வாக்யூலின்,
4.வைட்டமின் C,5.திருவிளையாடல், 6.பரிச முறை,
7.தாமோதர், 8.ஜம்மு காஷ்மீர், 9.ஆசியா. 10.யுரேடியம்.
நன்றி வின்மணி
http://winmani.wordpress.காம்
ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு
பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.
இணையதள முகவரி : http://dicts.info
ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
நன்றி வின்மணி
http://winmani.wordpress.com/2010/11/14/languagedicts/
| | |
மலைத்தேன்.. காட்டுத்தேன்... அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்... நோயை விரட்டும் தேன்... தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்.. பாடும்போதே நாவினிக்கிறதல்லவா? ஆம்! ''தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும்.தேனால் நாம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும்''. அப்படி என்ன விசேஷம் தேனில் என்று கேட்கிறீர்களா?! தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் சுத்தமான தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால், எந்த வியாதியும் நமக்கு வராது. 01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும். 03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம். 05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். 06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். 07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும். 09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும். 10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும். 12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும். 13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும். 14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். 18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும். 19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். 20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும். 21 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர். 22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள். 24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. 25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. 26 ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 27 நூற்றிருபது (120 ) கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். 28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.29 சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள்,இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. 30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது. 31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. 32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும். 33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது. 34 குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது. 35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது. இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும். மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும். நன்றி www.nidur.info/ |
உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.
ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,
ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும்.
ஒரு சிலருக்கு காலையில் வரும்.
ஒரு சிலருக்கு மாலையில் வரும்.
ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு இருபுறமும் வரும்.
ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.
ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.
ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.
ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும்.
ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும்.
ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும்.
ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.
ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும்.
வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.
நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.
1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.
3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.
5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.
7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.
9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.
மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.
1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache)
2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension)
3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation)
4. தசைச் சுருக்கம் (Muscle Spasm)
5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache)
என மருத்துவரகள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.
மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம்.
தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும்.
எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.