Vanakkam

காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

சனி, 24 ஜூலை, 2010

பல நோய் தீர்க்கும் கரிசலாங்கண்ணி


பல நோய் தீர்க்கும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக: கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க: கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.


கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு!
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற...
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

நன்றி http://tamilcnn.com/

பிணி தீர்க்கும் மஞ்சள்


பிணி தீர்க்கும் மஞ்சள்
பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது. இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது.


மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர். குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.


கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.


மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும். மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம். குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும். மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.


மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றிவிடும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும். மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.


மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும். மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.


மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும். மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது. புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.


மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன. மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக்கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது. மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்.

எலுமிச்சம்பழத்தின் மகத்துவம்


எலுமிச்சம்பழத்தின் மகத்துவம்
கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற சக்திதான் எலுமிச்சம்பழம். இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விஷயமாகும்.

காலப் போக்கில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு பல உண்மைகள் விஞ்ஞானிகளை வியப்பிலாழ்த்தி வருகிறது. 1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளென் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம் பழம் ரத்தத்தைத் து}ய்மை செய்துள்ளதை உலகுக்கு உணர்த்தினார்.


சர் ராபர்ட் மைக்கேரியன் என்ற மருத்துவ அறிஞர் காய்ச்சலைப் போக்கும். தடுமன் வராமல் தடுக்கும் என்று வெளியிட்டார். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட ரத்தத்தை உறையவைக்க வேண்டிய மிளாசத்தை எலுமிச்சம் பழத்தில் இருந்து எடுத்து காயங்களை எளிதில் ஆற்றினார்கள். இதன் பின் எலுமிச்சையின் சத்தினை அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது தெனரான் என்னும் இடத்தில் காகிதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தினார்கள். எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடித்த டென்சிங், ஹிலாரி ஆகிய இருவரும் தங்களுக்கு களைப்பு வரும் போதும் போதுமான பிராணவாயு கிடைக்காத போதும் எலுமிச்சம் பழத்தை உபயோகித்தார்களாம்.


குரங்குகளுக்கு நோய் கண்டால் எலுமிச்சம்பழத்தின் மூலம் டார்வின் சிகிச்சையளிப்பாராம். ஒரு முறை குரங்குகளுக்கு அதிகப்படியான மதுவினைக் குடிக்கச் செய்து சிறிது நேரம் கழித்து பல வகையான பழங்களைத் தின்பதற்கு வைத்தாராம். எந்தப் பழத்தையும் எடுக்காமல் எலுமிச்சம் பழத்தை மட்டிலும் கடித்து சாறு குடித்ததாம். டார்வின் ஆய்வு நூலில் இவ்விதம் கூறப்படுகிறது. அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றின் கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்தாய்வு செய்கிறார்கள். இதில் பயோ ஃப்ளோவின் ஒரு முக்கியமான மருந்து. இந்த பயோ ஃப்ளோவின் என்ற மருந்து எலுமிச்சையின் தோலில் அதிகம் உள்ளது.


இந்த மருந்தை எலிகளுக்குக் கொடுத்து மிகக்கடுமையான எக்ஸ்ரே கதிர்களை எலிகளின் மீது செலுத்தினார்கள். ஆனால் எலிகளுக்கு எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். புற்று நோய் உள்ளவர்களுக்கு பயோஃப்ளோ கலந்த மருந்தைச் செலுத்தி எக்ஸ்ரே கதிர் சிகிச்சையளித்தார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மனிதர்களை பாதிக்கவில்லை என்று கண்டுபிடித்தார்கள். நோயாளிகள் கதிர் இயக்கத்தை தாங்கிக் கொண்டார்கள். இனி வருங்காலத்தில், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்துகள் வந்துவிடும். லெமன் பெக்டின் என்ற மருந்து காயங்களின் மேல் பூசினால் ரத்தப் பெருக்கு நிறுத்தப்படுவதைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.


இதன் பயனாக ஹோமோ ஃபிலியா நோயாளிகளின் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிட்ரிக் ஆசிட்டின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக கிருமிகளைக் கொல்லக் கூடியது. லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சை உப்பு ஆழ்துளை மூலம் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு பூமிக்கு அடியில் உள்ள கால்ஷியத்துடன் வினை புரிந்து எண்ணெய் வெளிவர உதவி செய்கிறது. இரும்பு கடினமானது. மேலும் கடினமாக்குவதற்கு எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சத்துப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில் எலுமிச்சம் பழத்தை எப்படி பயன்படுத்தலாம்? புளிப்புச்சுவையான எலுமிச்சம் பழச்சாறு நாம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மையாக மாறிவிடும். பல நன்மைகள் ஏற்பட உதவும்.


எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி ஆகியவையும் எலுமிச்சம் பழத் தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியவையும் இருக்கின்றன. பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலுமிச்சம் பழம் போதுமானது. சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும் மந்திரவாதிகளுக்கும் எலுமிச்சை தேவை. உணவுப்பொருளில் சேரும்போது இதன் சத்துப் பொருள் உணவில் சேர்வதோடு நல்ல மணமும் ருசியும் கிடைக்கிறது. லைம் ஜூஸ் கிளிசரின் தைலத்தை தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாறைக்கூட உபயோகிக்கலாம். கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு ஈடான பழங்களே இல்லை. எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும்.


நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும். எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


பேதி மருந்து சாப்பிட்டு, பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்து தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம். வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது. வெட்டைச் சூடு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சம்பழச் சாறும் சிறிய அளவு நீராகாரத் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும். மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.


சூட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம்பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து, காலை மாலை சாப்பிட வேண்டும். பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும். மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர், மோர், ரசம் இவற்றைச் சாப்பிட்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும். சிறுநீர் எரிச்சலை உடனே நிறுத்தும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காட்டுச் சீரகம் என்ற மருந்தை நன்றாக மைபோல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிதுநேரம்வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, பொருக்கு முதலானவை சிலமுறை உபயோகத்தில் மாறிவிடும்.


தலையில்பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித்தேய்த்து நன்றாக ஊறிய பின் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். தலைமயிர் சுத்தமாகும். எலுமிச்சம் பழச்சாற்றில், காட்டுச் சீரகத்தை சாந்துபோல் அரைத்து சொரி, சிரங்குகளுக்குப் போட்டால் நோய் நீங்கும். சொரி, சிரங்குகள் நீடித்த நாட்களாக இருப்பவர்கள் பழச்சாற்றில் சீனி கலந்து பகல் வேளையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேமல் நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும். உடலில் தேய்த்து 8மணி நேரம் வைத்திருந்து சுடுநீரில் குளிக்க வேண்டும். முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.


திரிகடுகு சு10ரணத்தில் சற்றுக் கூடுதலாக எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு ஓரளவிற்கு சீனியும் சேர்த்து ஒரு மண் கலயத்திலிட்டு நன்றாக மூடி சீலை மண் செய்து ஒரு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து ஆறுவாரங்கள் சென்ற பின் எடுத்து எலுமிச்சை நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத அஜீரணம், பசியின்மை, வாய்வு வலிகள், கை, கால் உளைச்சல் நரம்புத்தளர்ச்சி, ரத்த சோகை முதலிய வியாதிகளைப் போக்கிவிடும். இது கை கண்ட மருந்தாகும். இதோ ஒரு இனிப்பான செய்தி... எலுமிச்சையில் இருந்து ஸ்குவாஷ் செய்து தினம் சாப்பிடுங்கள்.


எலுமிச்சம் பழச்சாறு 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் சாற்றை வடிகட்டவேண்டும். சர்க்கரையை தண்ணீரில் பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும், அடுப்பை விட்டு எடுத்து பாகில் பழச்சாற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு கிலோ பழச்சாற்றுக்கு 700 மில்லி கிராம் பொட்டாசியம் பெட்டாபை சல்பேட் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

நன்றி http://tamilcnn.com/

செம்பருத்தியின் மருத்துவக் குணம்


செம்பருத்தியின் மருத்துவக் குணம்

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். உடல் உஷ்ணம் குறைய... உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு.


இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம். வெட்டை நோய் குணமாக... ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது. இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும்.


இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும். இருதயம் பலம் பெற... இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும்.


அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும். பேன் தொல்லை ஒழிய... சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும்.


இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கு... சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.’’

நன்றி http://tamilcnn.com/

கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!


கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!

தேங்காயில் உள்ள "பேட்டி ஆசிட் " (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.உடல் எடையைக் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. "தேங்காயில்,தேங்காய் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.அது உடலுக்கு ஆகாது.குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்,இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது" என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.


"பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும்,அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாய்ப் போற்றி வருகின்றன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.தென்னையில் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.


தேங்காய்,தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.தேங்காய்,தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.விருந்து,விழாக்கள்,பண்டிகைகள்,சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய் மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல,மருத்துவத்தின் அடியாள் சின்னமும் கூட.இந்தியாவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன் வயது எண்பது ஆண்டுகள் முதல் இருநூறு ஆண்டுகள் வரை.விதை வளர்ந்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை "தென்னம்பிள்ளை" என்று அழைக்கிறார்கள்.


தேங்காயில் உள்ள சத்துக்கள்


* புரதச்சத்து

* மாவுச்சத்து

* கால்சியம்

* பாஸ்பரஸ்

* இரும்பு

உள்ளிட்ட தாதுப் பொருட்கள்

* வைட்டமின் *

அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள்

* நார்ச்சத்து

என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்கள் தே ங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல்,படை,சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.வெள்ளைப் படுதலுக்கு தென்னம் பூ மாருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

நன்றி http://tamilcnn.com/

துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !


துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !

வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். ! என்ன செய்வது ? அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை !


துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.! தெரியுதா பெருமாள் கோவிலுக்கு போனால் தீர்த்தம் வாங்க மறக்காதீர்கள் !இன்னும் பாருங்கள் ! துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே அச்சப்படும் ! ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.


குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றமா உங்களிடமா ? போயே போச்சு ! சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம்.


சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன . மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.


அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு.


வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.


டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும். 20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.


நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல். துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை. துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.!


நான் சொன்னால் நம்பமாடீர்கள் நம் தாஜ்மகாலை பாதுகாக்க 10 லட்சம் துளசி செடிகள் உதவுகின்றன ! சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டதுளசி செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச் சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசிக்கு உள்ளது.


தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும் இது காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும்.


காற்றை சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ் மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்' என்றார். இத்தனை மதிப்பு வாய்ந்த துளசியை இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள், பாவித்தவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவிதன் அருளால்.! புவியன்பு கொண்டோர் அனைவரும் வீட்டுக்கு ஒரு துளசியும் சில மூலிகைகளும் வீட்டில் வளர்த்தால் வீடு நலம்பெறும் .புவியும் வாழ்த்தும் .

நன்றி http://tamilcnn.காம்/

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


தற்போது மழைக்காலம் என்பதால் சாலையின் இரு பக்கங்களிலும், வீடு ஓரங்களிலும் பல செடி கொடிகள் நிறைந்து வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை கொஞ்சம் உற்று கவனித்துப் பாருங்கள். நம் இதழில் நீங்கள் படித்த மூலிகைகளில் சில அங்கு காணப்படும்.


மூலிகைகளைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அநேக மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கின்றன.சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்குக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.இம்மாத இதழில் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.


இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.காச இருமல் கதித்தம சூரியயையம்பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்கற்பூர வள்ளிதனைக் கண்டு(அகத்தியர் குணபாடம்)கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தினநற்பாலர் நோயெலா நாசமா யகலுமே(தேரையர் குணபாடம்)குழந்தைகளுக்குசிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும்.


இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபடஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும்.


மேலும் இருமலும் ஏற்படும்.இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.சளித் தொல்லை நீங்கமூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


புகை பிடிப்பவரா ....?புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.


இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.வியர்வை பெருக்கிசிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன.


இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.


காசநோய்காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது. சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள்.


இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

நன்றி http://tamilcnn.com/

நோய்களை உணர்த்தும் நகங்கள்


நோய்களை உணர்த்தும் நகங்கள்

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற் காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்து கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.



நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..



நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண் மையாக இருக்கும்.. சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.



மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந் தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக் கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்த மும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழி யாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந் தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு கார ணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.



நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற் பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.. இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக் கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.



அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம்.



நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரி களால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

நன்றி http://tamilcnn.காம்