Vanakkam

புதன், 6 ஜூலை, 2011

வாழைப்பூ குழம்பு

தேவையானவை

மல்லி-தேவையான அளவு
கடுகு
சீரகம்
மிளகு
மிளகாய் - 6
சோம்பு
தேங்காய் - 1 மூடி
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1
புளி - எலுமிச்சம்பழ அளவு
கறிவேப்பிலை
உப்பு

செய்முறை:
1. முதலில் வாழைப்பூவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. மல்லி, வெங்காயம், சீரகம், மிளகு, சோம்பு, மிளகாய், தக்காளி ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
3. பிறகு இவை எல்லாவற்றையும் சேர்த்து புளி மற்றும் தேங்காய் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து, வாழைப்பூ மற்றும் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றவும்.
5. பிறகு உப்பு சேர்க்கவும்.
6. எல்லாம் சேர்ந்து கொதித்ததும் இறக்கவும்.