Vanakkam

வியாழன், 2 மே, 2013

கீரை பொங்கல் 

தேவையானவை:

     அரிசி - 2 டம்ளர்
     பாசி பருப்பு - 1/4 டம்ளர்
     கீரை - 1கட்டு
     மல்லி தழை - சிறிது
     நெய் - தேவையான அளவு
     மிளகு
     முந்திரி
     சீரகம், எண்ணெய் - தாளிக்க
     உப்பு - தேவைக்கு

செய்முறை:

 1. முதலில் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும்        கீரையை போட்டு வதக்கவும்.

3. பிறகு பாசிபருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

4. பின் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு, பொடித்த மிளகு, முந்திரி, நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

5. சிறிது நேரம் வெந்ததும் மல்லி சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்.

6. சுவையான கீரை பொங்கல் ரெடி.

குறிப்பு:

பருப்பு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி தொட்டு கொள்ள மிக சுவையாக இருக்கும்.

                                                                                                                 - கவி மலர்