Vanakkam

வியாழன், 2 மே, 2013

கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார்

துவரம் பருப்பை தனியே வேக வைக்கவும். மேலே படிகிற கசடை எடுத்துவிட்டு, நன்கு வேக விடவும்.

புளியைக் கரைத்துத் தனியே கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் காய்கறிகள் (பூசணிக்காய், அவரைக்காய் என விருப்பமான காய் அல்லது எல்லாம் கலந்தது), பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் அதில் தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில்சிவக்க வறுத்து அரைத்து சேர்க்கவும்.

கொதிக்கும் போது வெந்த பருப்பையும் சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். விருப்பப் பட்டால் துளி வெல்லம் சேர்க்கலாம்.

கடைசியாக கொஞ்சம் சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கி, கொதிக்கிற சாம்பாரில் கொட்டினால் கல்யாண சாம்பார் மணக்கும்.
                    
                                                                                                                  - கவி மலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக