Vanakkam

வெள்ளி, 11 ஜூன், 2010

சுடிதார் தைக்கும் முறை - Tops

சுடிதார் தைக்கும் முறை - Tops

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும். 2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.




1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.



முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)


சுடிதார் தைக்கும்முறை - Bottom

3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும். 4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.



1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.

2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.

3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.

4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.

5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.




நன்றி வசந்தி சுப்ரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக