Vanakkam

புதன், 1 டிசம்பர், 2010

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு

பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info

ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

நன்றி வின்மணி

http://winmani.wordpress.com/2010/11/14/languagedicts/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக